போர்க்களப் பெருமை 472. | தேவாசுரம் ராமாயணம் மாபாரதம் உளவென்று | | ஓவாஉரை ஓயும்படி உளதப்பொரு களமே. |
(பொ-நி.) அப் பொருகளம், தேவாசுர, ராமாயண, மாபாரதம் உள என்ற உரை ஓயும்படி உளது; (எ-று.) (வி-ம்.) தேவாசுரம் - சூரபதுமன் போர். ராமாயணம் மாபாரதம் அப்போர்களைக் குறித்து நின்றன. உள- சிறப்புற்றுப்பேச உள்ளன. ஓவா -ஒழியாத. உரை-சொல். உளது-சிறப்புற்றுளது. பொருகளம் -கருணாகரன் போர்க்களம். (1) |