கலிங்கப்பேய் காளியைக் களம் காணுமாறு அழைத்தலும் காளி களம் குறுகலும் | 473. | காலக்கள மதுகண்டருள் இறைவீகடி தெனவே | | | ஆலக்கள முடையான்மகிழ் அமுதக்களம் அணுகி. |
(பொ-நி.) களமது, கண்டருள் கடிதென; உடையான் மகிழ் அமுது, களம் அணுகி; (எ-று.) (வி-ம்.) காலன் - யமன். இறந்த உடல்களே நிறைந்தமையின் காலக்களமாயிற்று. இறைவீ - காளியே. கடிது - விரைவில். ஆலக்களம் உடையான்- நஞ்சுபூண்ட மிடற்றையுடைய சிவன். மகிழ் அமுது: காளி. அமுதத்தை யொத்தவள்: ஆகுபெயர். இதுவரை மொழிந்த செய்திகளெல்லாம் கலிங்கப் பேயின் கூற்றேயாவதைத் தெளிக. (2) |