காளி போர்க்களங்கண்டு வியந்துமொழிந்தது 474. | என்னேஒரு செருவெங்களம் | | எனவேயதி சயமுற்று அந்நேரிழை அலகைக்கண மவைகண்டிட மொழியும். |
(பொ-நி.) அந் நேரிழை, "களம் என்னே" என அதிசயமுற்று, மொழியும்; (எ-று.) (வி-ம்.) ஒரு- ஒப்பற்ற. செரு -போர். நேரிழை-காளி. அலகை-பேய். கணம்-கூட்டம். (3) |