குதிரைகள் அடிபெயர்க்கலாற்றாது நின்றமை 476. | நெடுங்குதிரை மிசைக் கலணை சரியப் பாய்ந்து | | நிணச்சேற்றிற் கால்குளிப்ப நிரையே நின்று படுங்குருதிக் கடும்புனலை அடைக்கப் பாய்ந்த பலகுதிரைத் தறிபோன்ற பரிசு காண்மின். | (பொ-நி.) குதிரை, கலணை சரிய, சேற்றில் கால்பாய்ந்து குளிப்ப, நின்று, குதிரைத்தறி போன்ற பரிசு காண்மின் ! (எ-று.) (வி-ம்.) கலணை-சேணம். பாய்ந்து-நெடுந்தொலை சென்று. நிணம் -கொழுப்பு குளித்தல்-மூழ்குதல். நிரை-வரிசை. குருதி-செந்நீர். கடும்புனல் -வெள்ளம். பாய்ந்த-நெடுந்தொலை அழுத்தி வைக்கப்பட்ட. குதிரைத்தறி: வெள்ளத்தை அடைத்துத் தடுக்கும் மரப்பலகை. பரிசு-தன்மை. (5) |