குற்றுயிராய்க் கிடந்த வீரரை நரி சூழ்ந்திருந்தமை 478. | சாமளவும் பிறர்க்குதவா தவரை நச்சிச் | | சாருநர்போல் வீரருடல் தரிக்கும் ஆவி போமளவும் அவரருகே இருந்து விட்டுப் போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின். | (பொ-நி.) சாமளவும் உதவாதவரை, சாருநர்போல், ஆவிபோம் அளவும், அருகே இருந்து, விட்டுப்போகாத, நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின்! (எ-று.) (வி-ம்.) நச்சி-விரும்பி. சாருநர்-அடைவோர். தரித்தல்-நிலைபெறல். ஆவி-உயிர். நரிக்குலம்-நரிக்கூட்டம். புணர்ச்சி-கூட்டம். (7) |