விழி இயல்பு கூறி விளித்தது

48. கடலில் விடமென அமுதென மதனவேள்
     கருதி வழிபடு படையொடு கருதுவார்
உடலின் உயிரையும் உணர்வையும் நடுவுபோய்
   உருவு மதர்விழி யுடையவர் திறமினோ.

     (பொ-நி.) விடமென, அமுதென, மதனவேள் படையொடு, உயிரையும்
உணர்வையும் உருவும் மதர் விழி உடையவர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) கடல்-பாற்கடல். விடம்-நஞ்சு; மதனவேள்-மன்மதன். வழிபடு மதனவேள்    என    இயைக்க.    படை  - மலர்க்  கணை.  உருவும்-
ஊடுருவிச்செல்லும்.  மதர் - செருக்கு.  கண்ணே  மன்மதன்  படைகளைக் கொண்டிருத்தல்  கூறப்பட்டது - மாதர்கண்கள்  ஆடவர்கள்  பிரியுங்கால் துன்பத்தையும்      புணருங்கால்     இன்பத்தையுஞ்     செய்வனவாம்.
"நீங்கிற்றெறூஉம்  குறுகுங்கால்  தண்ணென்ணும்" என்னுங் குறளும் ஈண்டு
எண்ணற் பாலதாம்.                                          (28)