கணவரைத் தேடிய மனைவியர் செயல் 481. | தங்கணவ ருடன்தாமும் போக வென்றே | | சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார் எங்கணவர் கிடந்தவிடம் எங்கே யென்றென்று இடாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின். |
(பொ-நி.) கனவருடன் தாமும் போக என்று,"கிடந்த இடம் எங்கே" என்று என்று சாதகரைக் கேட்பார் ; தடவிப்பார்ப்பார் ; இடாகினியைக் கேட்பாரைக் காண்மின் ! (எ-று.) (வி-ம்.) சாதகர் - காளியின் மெய்காப்பாளர். தடவிப்பார்ப்பார் -தேடிக்காண்பர். இடாகினி - சுடலைப் பிணம் தின்னும் பேய். (10) |