கணவனைத் தழுவி உயிர்விட்ட பெண்டிர் இயல்பு      | 483. | தரைமகள்தன் கொழுநன்றன் உடலந் தன்னைத் |  |   |      தாங்காமல் தன்னுடலாற் றாங்கி விண்ணாட் 		டரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம்      ஆவிஒக்க விடுவாளைக் காண்மின் காண்மின். |   	     (பொ-நி.) கொழுநன்  உடலம்தன்னைத்  தரைமகள் தாங்காமல் தன     உடலால் தாங்கி,  அரமகளிர்   புணரா  முன்னம்  ஒக்கஆவி  விடுவாளைக்     காண்மின்;(எ-று.) 
       (வி-ம்.) தரை  மகள் - மண் மகள்.  உடலால்  தாங்கி -அணைத்து          என்றபடி. அரமகள்-தெய்வப்பெண்.  அவ்வுயிர்-அக்  கணவனுடைய  உயிர்.     ஆவி-உயிர். ஒக்க-ஒருசேர.						 	                                                            (12)   |