கணவன் தலை பெற்ற மனைவியின் செயல் 484. | பொருதடக்கை வாளெங்கே மணிமார் பெங்கே | | போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத பருவயிரத் தோளெங்கே எங்கே யென்று பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின். | (பொ-நி.) பயிரவியை ,"கை, வாள் எங்கே, மார்பு எங்கே, தோள் எங்கே" என்று கேட்பாளைக் காண்மின் ; (எ-று.) (வி-ம்.) பொருதடக்கை - போர்செய்கின்ற நீண்ட கை. கைவாள்: உம்மைத்தொகை. மணி-அழகிய. பரு - பருத்த. வயிரம் - அழுத்தமானது. பயிரவி-யோகினி. (13) |