நிணக்குவியலிடத்திருந்த காகங்களின் இயல்பு
 

486. நெருங்குஆக வச்செங்க ளத்தேத
       யங்குந்நி ணப்போர்வை மூடிக்கொளக்
கருங்காகம் வெண்காக மாய்நின்ற
      வாமுன்பு காணாத காண்மின்களோ.

    (பொ-நி.)  செங்களத்தே  நிணப்போர்வை  மூடிக்கொள, கருங்காகம்
வெண்காகமாய்  நின்ற  ஆ(று)  காணாத  காண்மின்கள்; (எ-று.)

     
(வி-ம்.) ஆகவம்-போர். தயங்குதல்-விளங்குதல். நிணம் - கொழுப்பு.
நின்றவா-நின்றவாறு என்ன  வியப்பு.  காணாத - இதுவரை  காணாதவற்றை.
பிணங்களின் கொழுப்பு காக்கைகளின்  மேல்  மூடுதலால்.  கருநிறம்  மாறி
வெண்ணிறமாகத் தோற்றங்  கொண்டதென்க.
                                                           (15)