களம் தாமரைப் பொய்கை போன்று காட்சியளித்தது
 

487.மிடையுற்ற தேர்மொட்டு மொட்டொக்க
       வெஞ்சோரி நீரொக்க வீழ்தொங்கல்பா
சடையொக்க அடுசெங்க ளம்பங்க
      யப்பொய்கை யாமாறு காண்மின்களோ.

     (பொ-நி.) தேர் மொட்டு மொட்டு ஒக்க, சோரி நீர் ஒக்க, தொங்கல்
பாசடைஒக்க, செங்களம் பங்கயப் பொய்கை ஆமாறு காண்மின்கள்; (எ-று.)

     (வி-ம்.) மிடைதல்-நெருங்குதல், மொட்டு - தேரின் கூம்பு, மொட்டு
-தாமரை மொட்டு. சோரி-குருதி. தொங்கல்-ஆடவர்மயிர்.  பாசடை- பசிய
இலை.  அடுசெங்களம்  - போர்புரிகின்ற  சிவந்த  போர்க்களம். பங்கயம்
-தாமரை.
                                                          (16)