வேல் தைத்து நிலத்துவிழா வீரர்நிலை 488. | வெயில்தாரை வேல்சூழ வும்தைக்க | | மண்மேல் விழாவீரர் வேழம்பர்தங் கயிற்றா லிழுப்புண்டு சாயாது நிற்கும் கழாய்ஒத்தல் காண்மின்களோ. |
(பொ-நி.) வேல்தைக்க, விழாவீரர், வேழம்பர்தம் கயிற்றால் சாயாது நிற்கும் கழாய் ஒத்தல் காண்மின் ; (எ-று.) (வி-ம்.) வெயில்- ஒளி. தாரை - ஒழுங்கு. சூழவும் - உடலெங்கும். வேழம்பர்-கழைக்கூத்தர். கழாய் - மூங்கில். வீரர்களின் உடல் முழுதும் தைத்த அம்புகளால், வீரர் இறந்தும் தரையில் வீழாமல் நிற்குங் காட்சி, கழைக் கூத்தர் கயிற்றால் |