களத்தில் கழுகும் பருந்தும் கண்ட காட்சி

489. இருப்புக்க வந்தத்தின் மீதேற
       லும்சூரர் எஃகம்பு தைக்க இறகைப்
பரப்பிச்சு ழன்றிங்கொர் பாறாட
      ஈதோர் பருந்தாடல் காண்மின்களோ.

     (பொ-நி.) கவந்தத்தின்மீது ஏறலும், சூரர்  இருப்பு எஃகம்  புதைக்க.
இங்கு   இறகைப்  பரப்பிச்  சுழன்று  பாறாட,  பருந்தாடல்  காண்மின்கள்;
(எ-று.)

     (வி-ம்.)இருப்பு எஃகம் என இயைக்க.  கவந்தம் - தலையற்ற உடல்
இருப்பு எஃகம் -இரும்பு வேல்.  புதைக்க - (உடம்பில்) அழுந்த.  இறகைப்
பரப்பி-சிறகுகளை விரித்து. பாறு-கழுகு.
                                                           (18)