வில் வாள் வீரர் கிடந்தமை கண்டு கூறியது 490. | வருஞ்சேனை தஞ்சேனை மேல்வந்து | | றாமேவில் வாள்வீரர் வாணாளுகக் கருஞ்சேவ கஞ்செய்து செஞ்சோற றச்செய்த கைம்மாறு காண்மின்களோ. |
(பொ-நி.)வில் வாள் வீரர் சேனை, தம் சேனை மேல் உறாமே; சேவகம் செய்து, செஞ்சோறு அறச்செய்த கைம்மாறு காண்மின்கள்; (எ-று.) (வி-ம்.) வரும் சேனை -எதிர்த்துவரும் படைகள், உறுதல்-சார்(ந்து அழித்)தல். வாணாள் - தங்கள் வாழ்நாள.் உக-கெட. கருமை-வலிமை. கருஞ்சேவகம் -வலிமை காட்டும் போர்ச்செயல். செஞ்சோறு-செஞ்சோற்றுக் கடன். அற-கழிய. கைம்மாறு-மாற்றுதவி. (19) |