யானைவீரர் தலையின் காட்சி  

491.யானைப்ப டைச்சூரர் நேரான
       போழ்தற் றெழுந்தாடு கின்றார்தலை
மானச்ச யப்பாவை விட்டாடும்
      அம்மானை வட்டொத்தல் காண்மின்களோ.

    (பொ-நி.) சூரர்  நேரான  போழ்து,  ஆடுகின்றார்   தலை,  அற்று
எழுந்து,  சயப்பாவை  விட்டு ஆடும் வட்டு ஒத்தல், காண்மின்கள்; (எ-று.)

     
(வி-ம்.) நேராதல் - எதிர் இடல். அற்று, எழுந்து,  ஒத்தல் காண்மின்
என இயைக்க. ஆடுதல் -போர்புரிதல். மானம்-பெருமை.  சயப்பாவை  - வீர
மகள், வட்டு -அம்மானைக்காய்.                                  (20)