விசும்பில் கண்ட காட்சி 492. | எதிர்கொளுஞ் சுரர்விமா னங்களிற் சுரர்களாய் | | ஏறுமா னவர்கள்தாம் எண்ணுதற் கருமையின் கதிர்விசும் பதனிலே இதனிலும் பெரியதோர் காளையம் விளையுமா காண்மினோ காண்மினோ. |
(பொ-நி.) விமானங்களில் ஏறும் மானவர்கள், எண்ணுதற் கருமையின், விசும்பதனில் பெரியதோர் காளையம் விளையுமா காண்மின்; (எ-று.) (வி-ம்.) சுரர் - தேவர். விமானம் - வானூர்தி. மானவர் - மனிதர்; வீரர்.கதிர்-ஒளி. விசும்பு-வானம். காளையம் - வீரர் கூட்டம். (21) |