குருதிக் கடல் 493. | அவர்இபஞ் சொரிமதங் கழிஎனப் புகமடுத் | | தவர்பரித் திரையலைத் தமர்செய்கா லிங்கர்தம் கவரிவெண் நுரைநிரைத் தவருடற் குருதியின் கடல்பரந் தோடுமா காண்மினோ காண்மினோ. | (பொ-நி.) மதம் கழி என மடுத்து, பரித்திரை அலைத்துக்கவரி வெண்ணுரை நிரைத்து, உடற் குருதியின் கடல் பரந்து ஓடுமா காண்மின்; (எ-று.) (வி-ம்.) அவர்-கலிங்கர், இபம்-யானை. கழி-கடற்கரைக் கால்வாய். புக மடுத்து-தன்னுடன் வந்து விழ, தான் ஒன்றாகக் கலந்து. பரி-குதிரை. திரை - அலை. குதிரை அலைகளைப் போன்றிருந்தன வென்க அமர் -போர். கவரி நுரை போன்றிருந்தன என்க. அவர். கலிங்கர். யானையின் மதநீர் கடற்கால்வாய் போன்றிருந்ததென்க. குருதியே கடலாமென்க. (22) |