வில் திறன் கண்டு வியந்த வீரர் நிலை 495. | உற்றவாய் அம்புதம் பரிசையும் கருவியும் | | உருவிமார் பகலமும் உருவிவீழ் செருநர்வில் கற்றவா ஒருவன்வில் கற்றவா என்றுதம் கைம்மறித் தவரையும் காண்மினோ காண்மினோ. |
(பொ-நி.) அம்பு, உருவி உருவி, வீழ் செருநர், "ஒருவன் வில் கற்றவா, வில்கற்றவா" என்று, தம் கை மறித்தவரையும் காண்மின் ! (எ-று.) (வி-ம்.) உற்ற-அடைந்த. வாய்-தம்உடலிடம். அம்பு-எதிரி விடுத்த அம்பு. பரிசை - கேடகம். கருவி - கவசம். செருநர்-வீரர். ஒருவன்: கருணாகரன். கைமறித்தவரையும் (இவன் வீரர்களால் எதிர்க்க இயலாதவனென அவன் பெருமையை வியந்து ) கையை யசைத்தவர்களையும். (24) |