கண்விழித்துக் கிடக்கும் வீரர் நிலை 

496.விண்ணின்மொய்த் தெழுவிமா னங்களிற் சுரர்களாய்
       மீதுபோ முயிர்களே யன்றியே இன்றுதம்
கண்ணிமைப் பொழியவே முகமலர்ந் துடல்களும்
      கடவுளோர் போலுமா காண்மினோ காண்மினோ.

     (பொ-நி.)  சுரர்களாய்ப்போம்  உயிர்களே  அன்றி,  இன்று இமைப்பு"
ஒழிய, முகமலர்ந்து, உடல்களும் கடவுளோர் போலுமா காண்மின் ! (எ-று.)

     (வி-ம்.)  விண்-வானம்.  மொய்த்தல் -நெருங்கல். சுரர்-தேவர். உயிர
்-வீரர் உயிர். இன்று-இப்பொழுது. கண்இமைப்பு ஒழிய-கண்கள்  இமைத்தலை
விடலாக. உடல் -வீரர் உடல். கடவுளோர்-தேவர். போலும் ஆ-ஒத்திருக்கும்
இயல்பை: ஆறு-ஆ எனக் கடைக்குறைந்து நின்றது.                 (25)