வெட்டுண்ட யானைத் தலைகளின் காட்சி 497. | பிறைப்பெ ரும்பணை வேழம் முன்னொடு | | பின்து ணிந்து தரைப்படும் குறைத்த லைத்துணி கொல்லன் எஃகெறி கூடம் ஒத்தமை காண்மினோ. | (பொ-நி.) வேழம் துணிந்து, தரைப்படும் குறைத்தலைத்துணி, கொல்லன் எஃகு எறி கூடம் ஒத்தமை காண்மின் ! (எ-று.) (வி-ம்.) பிறை மூன்றாம் பிறையை ஒத்த : உவமத்தொகை. பணை-தந்தம். வேழம்-யானை. முன்னொடு - முற்பகுதியாகிய தலையோடும் :முன் என்பது தலையை உணர்த்தலால் ஆகுபெயர். பின்-பிற்பகுதியாகிய உடல். துணிந்து - வெட்டப்பட்டு. படும் - வீழ்ந்து கிடக்கும். துணி -வெட்டப்பட்ட பகுதி. எஃகு - போர்க்கருவி. எறிதல் - அடித்தல். கூடம் -சம்மட்டி. (26) |