வாய்புகு வேல்பற்றிக் கிடந்த வீரர்நிலை
 

498.வாயி னில்புகு வேல்கள் பற்று
       வலக்கை யோடுநி லத்திடைச்
சாயு மற்றவர் காளம் ஊதிகள்
      தம்மை ஒத்தமை காண்மினோ.

     (பொ-நி.) வாயினிற்புகு  வேல்கள்  பற்று  கையோடு  சாயும் அவர்,
காளம் ஊதிகள் தம்மை ஒத்தமை  காண்மின்; (எ-று.)

     
(வி-ம்.) வாய்-தம்வாய். பற்றுவலக்கை-பிடிக்கின்ற வலக்கைகளானவை,
காளம்-ஊதுகொம்பு. ஊதிகள்-ஊதுகின்றவர், வாசிப்போர். தம்வாயில்  புகுந்த
வேலைப் பறிப்பதற்காகப் பற்றி  வீழ்ந்தோர்  ஊதுகொம்பு  ஊதுவோர்போல் காட்சி யளித்தனர் என்க.                                       (27)