வேல்ஊன்றித் தேர்மேல் நிற்பார்நிலை 499. | படவூன்று நெடுங்குந்தம் மார்பி னின்று | | பறித்தனை நிலத்தூன்றித் தேர்மேல் நிற்பார் படவூன்றி விடுந்தொழிலோர் என்ன முன்னம் பசுங்குருதி நீர்தோன்றும் பரிசு காண்மின். |
(பொ-நி.) குந்தம் மார்பினின்று பறித்து, நிலத்து ஊன்றித், தேர்மேல் நிற்பார், படவுவிடும் தொழிலோர் என்ன, முன்னம், நீர்குருதி தோன்றும்! (எ-று.) (வி-ம்.) பட-அழுந்த. குந்தம் -வேல். பறித்து-பிடுங்கி. நிலத்து ஊன்றி-தரையில் நட்டு. நிற்பார் தொழிலோர் என்ன, முன்னம் குருதி தோன்றும் என இயைக்க. படவு-படகு. ஊன்றிவிடும் தொழிலோர் -அழுத்திவிடுகின்ற படகோட்டுவோர். முன்னம் - அவ்வீரருக்கு முன்னிலையில். குருதி -செந்நீர். பரிசு - தன்மை. வேலூன்றித் தேர்மேல் நிற்பார், படகு வலிப்போராக. குருதி, நீர்போல் காட்சியளித்த தென்க. (28) |