நிணமென அம்பு வாய்கொண்ட பருந்தின் நிலை
 
500.வாயகலம் பரத்தமொடு நிணங்கொண் டோட
       மற்றதனை வள்ளுகிரின் பருந்து கோணல்
வாய்அகலம் பரத்தினிடைக் கௌவி வல்வாய்
      வகிர்ப்பட்டு நிலம்பட்ட வண்ணங் காண்மின்.

     (பொ-நி.) அம்பு(ஐ)நிணத்தொடு அரத்தம்  கொண்டு  ஓட  பருந்து
அதனை   வாய்   கௌவி ,  வாய்  வகிர்ப்பட்டு  நிலம்பட்ட  வண்ணம்
காண்மின்;  (எ-று.)

      (வி-ம்.) வாய் - அம்பின்  கூரிய   முனை.   அரத்தம் - இரத்தம்.
நிணத்தால்  பொதியப்பெற்றவோர்  அம்பை  இரத்தவெள்ளம்   இழுத்துச்
சென்றதென்க. வள்-கூர்மை. உகிர்-நகம். கோணல்-வளைவு. வாய்-அலகால்.
அகல்-விரிந்த. அம்பரம்- வாணம்.  வகிர்பட்டு-(நிணத்துள்  மறைந்திருந்த
அம்பால் பிளவுண்டு. நிலம்படுதல்-வீழ்தல்.                       (29)