பிணந்தின் பூதத்தின் செலவு
 

501.சாதுரங்கத் தலைவனைப்போர்க் களத்தில் வந்த
       தழைவயிற்றுப் பூதந்தான் அருந்தி மிக்க
சாதுரங்கம் தலைசுமந்து கமஞ்சூல் கொண்டு
      தனிப்படுங்கார் எனவருமத் தன்மை காண்மின்.
 
     (பொ-நி.) பூதம், தலைவனை  அருந்தி,  துரங்கம்  தலைசுமந்து சூல்
கொண்டுபடும்  கார்  என,  வரும்  அத்  தன்மை  காண்மின்!  (எ-று.)

     (வி-ம்.)  சாதுரங்கத்தலைவன் - படைத்தலைவன்.   தழை - பருத்த.
(ஒட்டிய)  வயிறு-தழைவயிறு:  வினைத்தொகை  அருந்தி-உண்டு. சாதுரங்கம்
-இறந்த   குதிரைகள்.  கமம்  நிறைவு:  உரிச்சொல்.  தனிப்படும் - ஒப்பற்ற
சிறப்பொடு  தோன்றும்.  கார்-மேகம்.  தழை-வயிற்றுப்பூதம்   சூல்கொண்ட
மேகத்தை  ஒத்ததென்க.
                                                           (30)