மார்பில் விழுப்புண்பட்ட யானைவீரரைக் கூறியது. 502. | முதுகுவடிப் படியிருக்கும் என்ன நிற்கும் | | முனைக்களிற்றோர் செருக்களத்து முந்துதங்கள் முதுகுவடுப் படும்என்ற வடுவை அஞ்சி முன்னம்வடுப் பட்டாரை இன்னம் காண்மின். |
(பொ-நி.) குவடு இப்படி இருக்கும் என்ன நிற்கும் களிற்றோர் வடுவை அஞ்சி, முன்னம் வடு்பட்டாரை இன்னம் காண்மின்! (எ-று.) (வி-ம்.) முது குவடு-பெரிய மலை. முனை-போர். களிறு-யானை. முதுகு வடுபடும்-பின்புறம் காயம் உண்டாம். வடுவை-பழியை. முன்னம் -மார்பு. காளி பேய்களுக்கு இங்ஙனம் களம் காட்டி முடித்ததென்க. (31) |