பேய்கள் ஒன்றனையொன் றழைத்தல் 504. | குறுமோ டீநெடு நிணமா லாய்குடை கலதீ கூர்எயி றீநீலி | | மறிமா டீகுதிர் வயிறீ கூழட வாரீர் கூழட வாரீரே. | (பொ-நி.) மோடீ, நிணமாலாய், கலதீ, கூர்எயிறீ, நீலி, மறிமாடீ, குதிர்வயிறீ கூழ்அடவாரீர் கூழ் அடவாரீர்; (எ-று.) (வி-ம்.) குறுமை-வடிவாற் குறுமை. குடைதல்-நீராடல். எயிறு-பல். குறுமோடீ முதலியன, பேய்களின் பெயர்கள் விளியேற்றன. (33) |