பேய்கள் பல் துலக்கம 505. | பறிந்த மருப்பின் வெண்கோலால் | | பல்லை விளக்கிக் கொள்ளீரே மறிந்த களிற்றின் பழுஎலும்பை வாங்கி நாக்கை வழியீரே. | (பொ-நி.) மருப்பின் கோலால் பல்லை விளக்கிக் கொள்ளீர் களிற்றின் பழு எலும்பை வாங்கி நாக்கை வழியீர்; (எ-று.) (வி-ம்.) பறிந்த-நீங்கிய. மருப்பு-யானைத் தந்தம், மறிந்த-(இறந்து) வீழ்ந்த. பழு எலும்பு-விலா எலும்பு, வாங்கி-பறித்து. (34) |