நகம் திருத்தலும் எண்ணெய் இடலும்
 
506.வாயம் புகளாம் உகிர்கொள்ளி வாங்கி உகிரை வாங்கீரே
 பாயுங் களிற்றின் மதத்தயிலம் பாயப் பாய வாரீரே.

     (பொ-நி.)  அம்புகளாம்  உகிர்கொள்ளி  வாங்கி,  உகிரை  வாங்கீர்:
களிற்றின்  மதத்தயிலம்  பாயப்பாய  வாரீர் ; (எ-று.)

     (வி-ம்.) வாய்-அம்பின்  கூரிய முனை. உகிர் கொள்ளி-நகம் களையும் கருவி. களிறு-ஆண்  யானை.  மதத்தயிலம்-மத நீராகிய எண்ணெய். வாரீர்-தலையில் வாருங்கள்.                                       (35)