இதுவும் அது

508.குருதிக் குட்ட மித்தனையுங் கோலும் வேலும் குந்தமுமே
 கருவிக்கட்டு மாட்டாதீர் கரைக்கே இருந்து குளியீரே.

     (பொ-நி.) இத்தனை   குட்டமும்   கோலும்,   வேலும்,  குந்தமுமே, மாட்டாதீர்; கரைக்கே இருந்து குளியீர் ; (எ-று.)

     (வி-ம்.)     குட்டம்-குளம்.     கோல்-ஈட்டி.    குந்தம்-எறிகோல்.
கட்டு-கூட்டம்.   மாட்டாதீர்-அகப்பட்டுக்   கொள்ளாதீர். கரைக்கு-கரையில்:
உருபு மயக்கம்.                                              (37)