உடை உடுத்தல்

509.ஆழ்ந்த குருதி மடுநீந்தி
       அங்கே இனையா திங்கேறி
வீழ்ந்த கலிங்கர் நிணக்கலிங்கம்
     விரித்து விரித்துப் புனையீரே.

     (பொ-நி.) மடு   நீந்தி,    இனையாது,  ஏறி, நிணக்கலிங்கம் விரித்து
விரித்துப்  புனையீர்  !  (எ-று.) }

      (வி-ம்.) குருதி  மடு-இரத்தத்  தடாகம். இனைதல்-வருந்தல். நிணம்-கொழுப்பு.  கலிங்கம் -ஆடை.  புனைதல்-அணிதல்.                (38)