கூடல் இழைத்த இயல்பு கூறி விளித்தது 51. | மெய்யில ணைத்துருகிப் பையஅ கன்றவர்தாம். | | மீள்வரெ னக்கருதிக் கூடல்வி ளைத்துஅறவே கையில ணைத்தமணல் கண்பனி சோர்புனலில் கரையவி ழுந்தழுவீர் கடைதிற மின்திறமின் . |
(பொ-நி) அகன்றவர் மீள்வரெனக் கருதி, கூடல் விளைத்து, அறவே, மணல் புனலில் கரைய அழுவீர் திறமின்; (எ-று.)
(வி-ம்.) மெய் - உடல். அணைத்து - தழுவி. உருகி-மனம் உருகி (க் காட்டி) பைய - மெல்ல. அகன்றவர் - பிரிந்தவர். கையில் அணைத்த- கைகளினால் சேர்த்த. கூடல் விளைத்தல்- மணலில் சுழித்துக் குறியறிதல். அறவே - சுழியாமல் நீங்கி நிற்க. புனல்-நீர.் கூடல் இழைத்த மணல் கண்ணீரால் கரைந்தது. கூடற்சுழி கூடாமற் போகவே கணவர் விரைவில் வந்து கூடாரென மிகுதியாக வருந்தலாயினர் என்க. (31) |