கைவளையும் காலணியும் புனைதல்
510. மதங்கொள் கரியின் கோளகையை
       மணிச்சூ டகமாச் செறியீரே
பதங்கொள் புரவிப் படிதரளப்
     பொற்பா டகமாப் புனையீரே.

     (பொ-நி.)    கோளகையைச்   சூடகமாகச்    செறியீர்;   புரவிப்படி
பாடகமாகப் புனையீர் (எ-று.)

     (வி-ம்.) கரி-யானை.  கோளகை-கிம்புரி.  சூடகம்-கைவளை. புரவிபதம்
கொள்படி-குதிரை  மேலிடும்  தவிசோடு  தொடர்புற்று, ஏறிச் செலுத்துவோர்
பாதத்தை  வைத்தற்கிடமாயுள்ளது. தரளம்-முத்து.  பாடகம்-காலணி.     (39)