காதணி புனைதல் 511. | ஈண்டும் செருவிற் படுவீரர் | | எறியும் பாரா வளையடுக்கி வேண்டுமளவும் வாய்நெகிழ்த்து விடுகம் பிகளாப் புனையீரே. |
(பொ-நி.)பாராவளை அடுக்கி, வாய்நெகிழ்த்து, விடுகம்பிகளாகப் புனையீர் ! (எ-று.) (வி-ம்.) ஈண்டுதல்-முதிர்தல். செரு-போர். படுதல்-இறத்தல். பாராவளை-வளைதடி. அடுக்கி-ஒன்றின்மேல் ஒன்றாகக் குவித்து. நெகிழ்த்து-அகற்றி. விடுகம்பி-காதணி. (40) |