இதுவும் அது 512. | பணைத்த பனைவெங் கரிக்கரத்தால் | | பரிய கருநாண் கட்டீரே இணைத்த முரசம் வாள்காம்பிட் டிரட்டை வாளி ஏற்றீரே. | (பொ-நி.) கரிக்கரத்தால் பருநாண் கட்டீர் ; முரசம் வாள் காம்பு இட்டு, வாளி ஏற்றீர் ! (எ-று.) (வி-ம்.)பணைத்தல்-பருத்தல். பனை-பனைபோன்ற. கரம்-துதிக்கை. பரிய-பெரிய.நாண்: காதில் அணிவது :காப்புக் கயிறுமாம். இணைத்த முரசம் -ஒன்று சேர்த்த முரசுகளை. காம்பு இட்டு - காம்பாக இட்டு வாளி; ஒருவகைக்காதணி. (41) |