தோளணியும் கழுத்தணியும் புனைதல் 513. | பட்ட புரவிக் கவிகுரத்தால் | | பாகு வலயஞ் சாத்தீரே இட்ட சுரிசங் கெடுத்துக்கோத்து ஏகா வலியுஞ் சாத்தீரே. | (பொ-நி.) கவி குரத்தால் பாகு வலையம் சாத்தீர்; சங்கு எடுத்துக்கோத்து ஏகாவலியும் சாத்தீர்! (எ-று.) (வி-ம்.) பட்ட-இறந்த. புரவி-குதிரை. கவி-கவிந்த. குரம்-குளம்பு. பாகு வலயம்-தோள்வளை. இட்ட-வீரர் போகவிட்ட. சுரி-வளைந்த. சங்கு -முழக்கிய சங்கு. ஏகாவலி -ஒற்றைச் சரமாலை. சாத்தி அணிவீராக. (42) |