வன்னசர மணிதல்
 

514.பொருசின வீரர்தம் கண்மணியும்
      போதக மத்தக முத்தும்வாங்கி
வரிசைய றிந்து நரம்பிற்கோத்து
     வன்னச ரங்கள் அணியீரே.

     (பொ-நி.)  வீரர்தம்  கண்மணியும்,  மத்தகமுத்தும் வாங்கி, அறிந்து,
கோத்து  வன்னசரங்கள் அணியீர்! (எ-று.)

     
(வி-ம்.) கண்மணி-கண்  விழி. போதகம்-யானை. மத்தகம்-தலையுச்சி.
வாங்கி-பறித்து. வரிசை-முறைமை. அறிந்து-எண்ணி ஆராய்ந்து. வன்னசரம்-
பலநிற  மணிகள்  கோத்த.                                    (43)