பேய்கள் உணவு குறித்தெழல் 515. | கொள்ளும் எனைப்பல கோலமென்மேல் | | கொண்டிட வேளையும் மீதூர உள்ளும் புறம்பும் வெதும்புங்காண் உண்பத னுக்கொருப் படுவீரே. | (பொ-நி.) கோலம் மேன்மேற் கொண்டிட, வேளையும் மீதூர, உள்ளும் புறமும் வெதும்பும், உண்பதனுக்கு ஒருப்படுவீர்! (எ-று.) (வி-ம்.) எனைப் பல-மற்றும் பல, கோலம்-அணி. வேளை-காலம். மீதூர-மிகுந்துகொண்டே செல்லலால். உடலின் உள்ளமும் புறமும் என்க. வெதும்புதல்-காந்தல். ஒருப்படுதல்-மனங்கொள்ளல். (44) |