அடுக்களை அமைத்தல் | 516. | மாகாய மதமலையின் பிணமலைமேல் | | | வன்கழுகின் சிறகால் செய்த ஆகாய மேற்கட்டி யதன்கீழே அடுக்களைகொண்டு அடுமி னம்மா. | (பொ-நி.) பிணமலைமேல், கழுகின் சிறகாற்செய்த மேற்கட்டியதன்கீழ் அடுக்களை கொண்டு அடுமின்! (எ-று.) (வி-ம்.) காயம்-உடம்பு. மதமலை-யானை. பிணமலை-பிணக்குவியல். மேற்கட்டி-அழகுபொருந்த. இருக்கைக்கு மேல் கட்டப்படுவது; பந்தல், கழுகுகள் இடையறாது வானத்தே நெருங்கிப் பறத்தலின், சிறகு மேற்கட்டியாயிற்று. அடுக்களை-சமையலறை. அடுதல்-சமைத்தல். (45) |