மெழுகிக் கோலமிட்டு அடுப்பமைத்தல்
 

517.பொழிமதத்தால் நிலமெழுகிப் பொடிந்துதிர்ந்த
      பொடித்தரளப் பிண்டி தீட்டி
அழிமதத்த மத்தகத்தை அடுப்பாகக்
     கடுப்பாக்கொண்டு அடுமி னம்மா.

      (பொ-நி.) மதத்தால்  மெழுகி,   தரளப்பிண்டி  தீட்டி, மத்தகத்தை அடுப்பாகக்கொண்டு  அடுமின்;  (எ-று.)

     (வி-ம்.)       மதம்-யானைமதம்.       தரளம்-முத்து.    போரில் யானைமத்தகத்தினின்று      வீழ்ந்த    முத்தும்    பொடிபட்டன   என்க.
தரளப்பிண்டி      தீட்டி-முத்துப்பொடியாகிய      மாவாற்    கோலமிட்டு.
அழிமதம்: வினைத் தொகை.  மத்தகம்.  யானைமத்தகம்.கடுப்பு-விரைவு. (46)