பானையை அடுப்பேற்றுதல் 518. | கொற்றவாள் மறவர் ஓச்சக் குடரோடு தலையுங் காலும் | | அற்றுவீழ் ஆனைப் பானை அடுப்பினில் ஏற்று மம்மா. | (பொ-நி.) மறவர் வாள் ஓச்ச, அற்றுவீழ் ஆனைப்பானை அடுப்பினில் ஏற்றும்.(எ-று.) (வி-ம்.) கொற்றம் - வெற்றி. மறவர்-வீரர். ஓச்சுதல் - எறிதல். அற்றுவீழ்- வெட்டுப்பட்டு விழுந்த. ஆனைப்பானை - ஆனையின் தனிஉடலாகிய பானை. (47) |