உணவுப் பண்டம் கொணர்தல்
 
519.வெண்டயிரும் செந்தயிரும் விராய்க்கிடந்த
      கிழான் போல வீரர் மூளைத்
தண்டயிரும் மிடைவித்த புளிதமுமாத்
     தாழிதொறும் தம்மி னம்மா.

     (பொ-நி.)    வெண்தயிரும்    செந்தயிரும் கிடந்த  கிழான் போல;
மூளைத்தயிரும்,  புளிதமுமா,  தாழிதொறும்  தம்மின்  (எ-று.)

     
(வி-ம்.)      விரவுதல்  -   கலத்தல்.    கிழான்  -   தயிர்த்தாழி.
மிடைவித்த  -  நிறைவித்த.   புளிதம்   -   இறைச்சி.   தாழி  -  பானை.
தம்மின்-கொண்டுவந்து  தாருங்கள்.                               (48)