ஊடல் இயல்பு கூறி விளித்தல் 52. | செருவிள நீர்பட வெம்முலைச் | | செவ்விள நீர்படு சேயரிக் கருவிள நீர்பட ஊடுவீர் கனகநெ டுங்கடை திறமினோ. | (பொ-நி) செவ்விளநீர் செரு இளநீர்பட, கருவிளம் நீர் பட ஊடுவீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) செருஇளநீர் - கலவிப்போர்க்குரிய எழுச்சியுள்ள தன்மை. பட -கெட. வெம்முலையாகிய செவ்விளநீர் என்க. சேயரிபடு என இயைக்க. சே அரி-சிவந்த கோடுகள். படு - பொருந்திய. கருவிளம் - கருவிள மலர் போன்ற கண்கள். நீர்பட- கண்ணீரைப் பொருந்த. ஊடுவீர் - கணவரொடு புலப்பீர். முலை நீர்மை கெடவும், கண்நீர் படவும் ஊடினர் என்க. செருவிளநீர் படுதல் - பசலை கொண்டு நிறவேற்றுமையைப் பெறுதல். (32) |