காயமும் உப்பும் இடுதல் 521. | துள்ளிவெங் களனில்வீழ் துரகவெண் பல்லெனும் | | உள்ளியுங் கிள்ளியிட் டுகிரினுப்பு இடுமினோ. | (பொ-நி.) பல் எனும் உள்ளி கிள்ளி இட்டு, உகிரின் உப்பு இடுமின்! (எ-று.) (வி-ம்.) களன்-போர்க்களம். துரகம்-குதிரை. உள்ளி-வெண்காயம். உகிரின் உப்பு-நகங்களாகிய உப்பு. (50) |