அரிசி கொணர்தல்

524.கல்லைக் கறித்துப் பல்முறிந்து
      தவிழ்ந்து வீழ்ந்த கலிங்கர்தம்
பல்லைத் தகர்த்துப் பழஅரிசி
     ஆகப் பண்ணிக் கொள்ளீரே.

     (பொ-நி.)   கலிங்கர்    தம்    பல்லைத்    தகர்த்  அரிசியாகப்
பண்ணிக்கொள்ளீர் ! (எ-று.)

     
(வி-ம்.)   கறித்து-கடித்து.  கவிழ்ந்து   வீழ்ந்த-குப்புற விழுந்த. பழ
அரிசி-பழைய   அரிசி ;   காய்ந்த  அரிசி.   கவிழ்ந்து வீழ்ந்து, கல்லைக்
கறித்துப்,  பன்  முறிந்த  என  இயைக்க. சோழவீரரால்  கவிழ்ந்து வீழ்ந்த
விரைவால்,   கலிங்கர்  பற்கள்  கீழேகல்லில் அடியுண்டு முறிந்தன என்க.
தகர்த்து-பெயர்த்தெடுத்து.                                     (53)