அரிசி குற்றும் உரல்
 

525.சுவைக்கும் முடிவில் கூழினுக்குச்
      சொரியும் அரிசி வரிஎயிறா
அவைக்கும் உரல்கள் எனக்குரல்கள்
     அவிந்த முரசம் கொள்ளீரே.

     (பொ-நி.)   கூழினுக்கு   அரிசி   எயிறா,  உரல்கள்  என  முரசம்
கொள்ளீர் ! (எ-று.)

     
(வி-ம்.)  சுவைக்கும் - சுவைத்தற்கேற்ற.  முடிவு    இல் - நிறைந்த.
வரி-வரிசை.   எயிறு-பல்.  அவைத்தல்-குற்றுதல்.   குரல்கள்  அவிந்த-ஒலி
அடங்கிய  அஃதாவது   போர்களத்தில்   தோல்கள்   கிழிந்து   சிதைந்து
கிடக்கும்  முரசங்கள்.                                         (54)