| உலக்கை கொண்டு குற்றல் | 526. | இந்த உரற்கண் இவ்வரிசி | | | எல்லாம் பெய்து கொல்யானைத் தந்த உலக்கை தனையோச்சிச் சலுக்கு முலுக்கெனக் குற்றீரே. | (பொ-நி.) உரற்கண் அரிசி எல்லாம் பெய்து, யானைத் தந்த உலக்கைதனை ஓச்சிக் குற்றீர்! (எ-று.) (வி-ம்.) கொல்யானை-கொல்லப்பட்ட யானை. தந்தமாகிய உலக்கை என்க. ஓச்சி-எடுத்து. சலுக்கு முலுக்கு : ஒலிக்குறிப்பு. குற்றீர்-குற்றுங்கள். (55) |