காளியைப் பாடி அரிசி குற்றுதல் 527. | தணந்த மெலிவு தான்தீரத் | | தடித்த உடல்வெம் பசிதீரப் பிணந்தரு நாச்சியைப் பாடீரே பெருந்திரு வாட்டியைப் பாடீரே. | (பொ-நி.) மெலிவு தீர, பசிதீர, பிணம் தரும் நாச்சியைப் பாடீர்! திருவாட்டியைப் பாடீர்! (எ-று.) (வி-ம்.) தணத்தல்-நீங்குதல், மெலிவு-தளர்ச்சி. தடித்த-இப்பொழுது உண்டு தடித்த. நாச்சி-காளி. திருவாட்டி- செல்வங்களுக்கெல்லாம் தலைவி. பாடீர்-பாடுவீர். (56) |