குலோத்துங்கனைப் பாடிக் குற்றுதல்
 

528.கவன நெடும்பரி வீரதரன்
      காவிரி நாடுடை யானிருதோள்
அவனி சுமந்தமை பாடீரே
     அரவு தவிர்ந்தமை பாடீரே.

     (பொ-நி.) வீரதரன், நாடுடையான் தோள் அவனி  சுமந்தமை  பாடீர்!
அரவு தவிர்ந்தமை பாடீர்! (எ-று.)

     
(வி-ம்.) கவனம் - விரைவு. பரி - குதிரை. தரன்-தரித்தவன். அவனி-
உலகம்.  சுமந்தமை - ஆட்சிப்   பொறுப்பேற்றமை.   அரவு - ஆதிசேடன்.
தவிர்ந்தமை-உலகில்  சுமை ஒழிந்தமை.                          (57)