சேரர் பாண்டியரை வென்றமை கூறிக் குற்றுதல் 529. | மன்னர் புரந்தரன் வாளபயன் | | வாரணம் இங்கு மதம்படவே தென்னர் உடைந்தமை பாடீரே சேரர் உடைந்தமை பாடீரே. | (பொ-நி.) அபயன் வாரணம் மதம்பட, தென்னர் உடைந்தமை பாடீர்! சேரர் உடைந்தமை பாடீர்! (எ-று.) (வி-ம்.) புரந்தரன்-இந்திரன். வாள் அபயன்-வாட்படைகொண்டோன். வாரணம்-யானை. தென்னர்- பாண்டியர். உடைதல்-தோற்றோடுதல். சேரர் -சேரமன்னர். (58) |