கலவி நிலைகூறி விளித்தது 53. | அளக பாரமிசை அசைய மேகலைகள் | | அவிழ ஆபரண மிவையெலாம் இளக மாமுலைகள் இணைய றாமல்வரும் இயன லீர்கடைகள் திறமினோ. |
(பொ-நி.) அளகபாரம் அசைய, மேகலைகள் அவிழ, ஆபரண மிவையெலாம் இளக, முலைகள் வரும் இயல் நலீர் திறமின்; (எ-று.)
(வி-ம்.) அளகம் - கூந்தல். பாரம் - சுமை; மிகுதி. மிசை-மேலே. மேகலை - இடை அணி. இளக - நெகிழ. மா-பெரிய. இணை அறாமல்- ஒன்றோடொன்று உயர்வு தாழ்வின்றி. வரும் - வளரும். இயல்- இயல்பினையுடைய. நலீர் - நல்லீர்; பெண்களே. கலவிக்கால இயல்பு கூறப்பட்டது. (33) |